கலவை அருகே முதியவர் விஷம் குடித்து பலி!
மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 74). இவரது மனைவி மல்லிகா (55). கடந்த 3-ந் தேதி ராதாகிருஷ்ணன் தனது மனைவி மல்லிகாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் கலவை சப்- இன்ஸ்பெக்டர் அமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.