கல்லூரி மாணவி மாயம் காவலர்கள் விசாரணை

கம்பைநல்லூர் அருகே கல்லூரி மாணவி மாயம் கம்பைநல்லூர் காவலர்கள் விசாரணை

Update: 2025-01-08 07:20 GMT
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் மகள் யுவஸ்ரீ அவருக்கு வயது 19 இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி வீட்டில், வழக்கம் போல் உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.மறுநாள் காலை பத்மநாபன் எழுந்து பார்த்த போது, யுவஸ்ரீயை காண வில்லை. விருதுநகர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் ஜனவரி 8 இன்று காலை புகார் அளித்தன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News