போச்சம்பள்ளி: விளை நிலங்களில் இரை தேடும் கொக்குகள்.
போச்சம்பள்ளி: விளை நிலங்களில் இரை தேடும் கொக்குகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி செய்து வரும் நிலையில் நிலங்களில் நெல் பயிரிடுவதற்காக ஆத்துக்கொல்லை, அகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் நீர் பாய்ச்சி இயந்திரம் மூலம் ஏர் உழுது தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகினறனர்.இதனால், நிலத்தின் அடியில் இருக்கும் புழு, பூச்சிக்ஙளை நிலத்தில் மேற்பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு, நடவு செய்ய தயாராகும் விளைநிலங்களில் உள்ள பூச்சிகளை உணவாக உட்கொள்ள, வெள்ளை நிற கொக்குகள் கூட்டமாக இறங்கி இரையை உண்டு வருகின்றன.