அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் ஆரணி கிளை சார்பில் மாதாந்திர கூட்டம்.

ஆரணி பெரியகடைவீதி காமாட்சிஅம்மன் கோயில் அருகில் அகில இந்திய விஸ்வ கர்மா பேரவையின் ஆரணி கிளை சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

Update: 2025-01-09 02:56 GMT
ஆரணி பெரியகடைவீதி காமாட்சிஅம்மன் கோயில் அருகில் அகில இந்திய விஸ்வ கர்மா பேரவையின் ஆரணி கிளை சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் செஞ்சி ஏ.குமார் தலைமை தாங்கினார். மாநில கௌரவ தலைவர் விழுப்புரம் ரமேஷ், பொதுச்செயலாளர் எம்.மருதராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஆரணி நகை தொழிலாளர் சங்க தலைவர் நாராயணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அகில பாரதி ஸ்வர்ணகாசி உறுப்பினர் மா.வி.கோவிந்தராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் காதி மற்றும் கிராம தொழிலாளர் ஆணையமும் மற்றும் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை இணைந்து தச்சருக்கான தொழிலாளர் திறன் மேம்பாடு பயிற்சியின் மூலமாக 40 பேருக்கு இலவசமாக தொழில் சாதனை கருவிகளும், ,சான்றிதழும், பெற்றுத் தந்த அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் மாநில அமைப்புச்செயலாளர் ஆரணி ஜி.கே.ஆறுமுகத்திற்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.மேலும் இதில் மாநில நிர்வாகி ஜெயராம்ஆச்சாரி, சண்முகம், கிளை நிர்வாகிகள் வேலு, சேவூர் சுரேஷ், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News