சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினர் ஆய்வு

Update: 2025-01-08 07:43 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி சாலையில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பேர் புற நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலக டாக்டர் ரமேஷ் ரமானந்த், அருப்புக்கோட்டை மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்ட சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு போதுமான மருந்துகள், படுக்கை வசதிகள், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கும் இடம், ஊசி போடும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். அப்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Similar News