வேளாங்கண்ணியில்

திராவிடர் கழக பொதுக்கூட்டம்

Update: 2025-01-08 07:48 GMT
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, "வைக்கம் வெற்றி முழக்கம்" என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். கூட்டத்தில் பேசிய, திராவிடர் கழக பொதுச் செயலாளர் சந்திரசேகரன், வைக்கம் போராட்ட வரலாற்றையும், திராவிடர் கழகத்தின் தியாகத்தையும், திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகளையும் விளக்கி பேசினார். முன்னதாக, திமுக மாவட்ட செயலாளர் என்.கௌதமன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அருட்செல்வன், மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் அனஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.

Similar News