மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்

பால் வண்டி ஓட்டுநர் இறந்தார்

Update: 2025-01-07 14:36 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு மேலத் தெருவை சேர்ந்தவர் முகம்மது சேட் (54). பால்வண்டி ஓட்டுநர். இவர் மோட்டார் சைக்கிளில் கோடியக்காட்டில் இருந்து, நேற்று வேதாரண்யம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, கோடியகாட்டைச் சேர்ந்த மணிமாறன் ( 30), மோட்டார் சைக்கிளில், விஜய் மற்றும் சண்முகம் ஆகியோருடன் 20 லிட்டர் டீசல் கேனுடன் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கோடியக்காடு முனியன் கோயில் அருகே வந்தபோது, மணிமாறனின் மோட்டார் சைக்கிள், முகம்மது சேட்டின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், முகம்மது சேட் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தகவலறிந்து, வேதாரண்யம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்த முகமது சேட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News