பன்றிக்கு வைத்த வெடியில் வளர்ப்பு நாய் சிக்கி பலி
பன்றிக்கு வைத்த வெடியில் வளர்ப்பு நாய் சிக்கி பலி
மாதர்பாக்கம் அருகே உள்ளது போந்தவாக்கம் கிராமம். அங்கு, புனித அன்னாள் சர்ச்சிற்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில், தர்ப்பூசணி வைப்பதற்காக அரசு பள்ளி ஆசிரியர் அன்பழகன் என்பவர், குத்தகைக்கு நிலத்தை வாங்கி சுத்தம் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் காவலாளியாக, பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த சீனய்யா, 60, என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அந்த நிலத்தில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த கேசவன், 28, என்பவரது நாய் கடித்துள்ளது. அப்போது, நாயின் தலை சிதறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பாதிரிவேடு போலீசாரின் விசாரணையில், பன்றி இறைச்சிக்காக காவலாளி சீனய்யா நிலத்தில் வெடி மருந்து வைத்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.