கொடநாடு கொலை வழக்கில் இருந்து தப்பிக்கவே பாஜகவுடன் EPS கூட்டணி வைத்துள்ளார் ஜெயலலிதா இருந்திருந்தால் 100 நாள் வேலை திட்ட மசோதாவை எதிர்த்து போராடி இருப்பார் எம்.பி கே.ஆர்.என். ராகேஷ்குமார் பேச்சு.

100-நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி ராஜேஷ்குமார் பேச்சு;

Update: 2025-12-24 13:50 GMT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது என இயங்கும் மத்திய பாஜக அரசின் செயலையும்-அதற்கு உறுதுணையாக இருக்கும் அதிமுகவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதே போல நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநிலங்களவை உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி.ராஜேஷ்குமார் பேசுகையில் மாநிலங்களவையில் 100 நாள் வேலை திட்ட மசோதா கொண்டு வந்த போது அதனை ஆதரித்து அதிமுக வாக்கெடுப்பில் பங்கேற்றது. ஜெயலலிதா இருந்திருந்தால் 100 நாள் வேலை திட்ட மசோதாவை எதிர்த்து போராடி இருப்பார், கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கவே பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார் பேசினார்.

Similar News