குந்தாணி பாளையத்தில் மது போதையில் விஷ மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு.
குந்தாணி பாளையத்தில் மது போதையில் விஷ மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு.
குந்தாணி பாளையத்தில் மது போதையில் விஷ மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேட்டமங்கலம் அருகே உள்ள குந்தாணிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி வயது 54. மணி அண்மை காலமாகவே மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் மீண்டும் மது அருந்திய மணி, மது போதையில், சல்பாஸ் மாத்திரைகளை உட்கொண்டு உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ஜெயா வயது 49 என்பவர், தனது கணவரை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி ஜனவரி 6 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த மணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.