ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்
21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகே ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையெடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 69 பேரைக் கைது செய்தனா்.