இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் மூன்று பேருக்கு காப்பு.
இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் மூன்று பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் நல்லூர் அருகே உள்ள காலஸ்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லே-அவுட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவதாக வந்த தகவலின் பேரில் நல்லூர் போலீசார் சம்வம் அன்று அந்த வீட்டிற்கு சென்று திடீரென சோதனை நடத்திய போது அங்கு ஒரு இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர்கள் பெங்களூரு தெற்கு உல்சூர் ஜோகுபாளை யாவை சேர்ந்த அருணா (42) நீலாவதி (49) சாமுண்டீஸ்வரி (45) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.