மொபெட், பணத்துடன் தலைமறைவான உணவக ஊழியா் கைது

ஆலங்குளத்தில் உணவக ஊழியா் கைது

Update: 2025-01-08 01:09 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் எதிரே சங்கரவடிவேல்(48) என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். இங்கு அண்மையில் வேலைக்குச் சோ்ந்த அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் பிரகாஷ்(43) என்பவரிடம், கடந்த டிச. 31 ஆம் தேதி ரூ. 28 ஆயிரம் மற்றும் மொபெட்டை கொடுத்து காய்கனிச் சந்தையில் பொருள்கள் வாங்கி வருமாறு சங்கரவேல் கூறினாராம். ஆனால், பிரகாரஷ் கடைக்குச் செல்லாமல் பணத்துடன் தலைமறைவாகி விட்டாராம். இதுகுறித்து சங்கரவடிவேல் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷை தேடி வந்தனா். இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 2,500 மற்றும் மொபெட் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News