கோவை:ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு !
ஊராட்சியை பேரூராட்சியாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியோடு இருக்க விரும்புவதாக பொதுமக்கள் விருப்பம்.
கோவை மாநகர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, பட்டணம் ஊராட்சி. இந்த ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பட்டணம், பட்டணம்புதூர், நாகம நாயக்கன்பாளையம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகருக்கு மிகவும் அருகில் இருப்பதால், இங்கு மக்கள் நெருக்கம் அதிகம். ஆனாலும் ஊராட்சியாகவே, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டணம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த நடவடிக்கையை கைவிட்டு கோவை மாநகராட்சியுடன் இணைப்பதையே விரும்புகிறோம்.மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதன் மூலம் அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.