புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு புகைமூட்டம் போல் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்வோர், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.வாகன ஓட்டிகள் வாகனங்களின் விளக்குகளை எரிய விட்ட வண்ணம் வாகனங்களை மெதுவாக நகர்த்தி செல்கின்றனர்.