புதுகை வடக்கு 4ஆம் வீதியை சேர்ந்த மாணிக்கம் (63) என்பவர் 06.01.25 மதியம் 3 மணிக்கு புதுகையில் இருந்து பரம்பூருக்கு பைக்கில் சென்றுள்ளார். புல்வயல் காட்டுப்பகுதியில் செல்லும் பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகன் நாராயண விஜய் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.