புளியங்குடி அருகே உழவர்களை நேசிப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது

உழவர்களை நேசிப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2025-01-08 03:50 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி புன்னையாபுரம் அருகே உள்ள முந்தல் மலையடிவாரத்தில் தனியார் அமைப்பின் சார்பில் உழவர்களை நேசிப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் பழனி செல்வம் தலைமை வகித்தார். புன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், புரவலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம் பாரதி பாடல் பாடினார். முத்துமாரி குறள் விளக்கம் அளித்தார். மாணிக்கவாசகம் இன்று ஒரு தகவல் வழங்கினார். துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீ அர்ஜுன் இயற்கை வழி வேளாண் பண்ணை சரவணன் விவசாயமும் அதன் சிறப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார். தென்காசி ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா நிலைய தலைவர் முனைவர் அறிவழகன், வியாச கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் காளித்துரை, தென்காசி மாவட்ட தேர்தல் தனிப்பிரிவு துணை தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயத்தின் சிறப்புகள் குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். குழுவில் துணைத் தலைவர் முப்புடாதி நன்றி கூறினார்.

Similar News