முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு வீரர்

மாநில அளவில் ஜூடோ விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் இடம் வாழ்த்து பெற்றார்

Update: 2025-01-08 05:49 GMT
மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று ரூ.1,50,000 /-லட்சம் ஊக்கத் தொகை மற்றும் தேசிய அளவில் விளையாட தேர்வு பெற்ற அதியமான் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர் இரா. அகரன், இன்று ஜனவரி 8 காலை, தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன் அவர்களை சந்தித்தார் அப்போது மேலும் இதுபோல் மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க மாணவனை முன்னாள் அமைச்சர் வாழ்த்தினார். இந்த நிகழ்வில் தருமபுரி மேற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுர்ஜித் மாணவர் அணி கார்த்திக், யோகேஷ், கார்த்திகேயன், கௌதம்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News