சங்கரநாராயண சுவாமி கோவிலில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
சங்கரநாராயண சுவாமி கோவிலில் அம்பாள் வீதி உலா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி காலையில் திருவாதிரை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது தொடர்ந்து அம்பல் காலை மாலை இருவேளைகளில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இன்று காலையில் உற்சவர் ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸ்மேத ஸ்ரீ நடராஜர் சோடச உபச்சார ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சுவாமி அம்பாள் தந்தப் பல்லக்கில் எழுந்தருளல் திருவீதி மூன்றாம் நாள் அம்பாள் நான்கு ரத வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.