மூத்தோர் தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு.

மதுரையில் மூத்தோர் தடகள போட்டியில் வென்ற காவலர்களை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

Update: 2025-01-09 06:45 GMT
தமிழ்நாடு 42வது மாநிலம் மூத்தோர் தடகள போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் காவல் துறை அணி சார்பில் மதுரை மாவட்ட ஆயுதப்படை சேர்ந்த தலைமை காவலர் ராஜா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் ,குண்டு எரிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஆயுதப்படை தலைமை காவலர் கார்த்திகேயன் 400 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் வெண்கல பதக்கமும் மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சேர்ந்த தலைமை காவலர் ராஜசேகர் அவர்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதில் வெற்றி பெற்ற அனைவரையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ,இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Similar News