கலசப்பாக்கம் அருகே போலீசார் கொடி அணிவகுப்பு.
300க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடலாடி , கீழ்பாலூர் , வீரளூர் , மேல்சோழங்குப்பம் , ஆதமங்கலம் புதூர் , கேட்டவரம்பாளையம் ஆகிய கிராமங்களில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் பங்கேற்று கொடி அணிவகுப்பு நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்