திண்டிவனத்தில் வியாபாரிகள் சங்க இணைப்பு விழா
வியாபாரிகள் சங்க இணைப்பு விழா
திண்டிவனம் சுற்று வட்டார பழைய பொருள் வியாபாரிகள் சங்கத்தை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புடன் இணைக்கும் நிகழ்ச்சி திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் ஓட்டலில் நடந்தது.கூட்டத்தில் சங்கத்தை வணிகர் சங்க பேரமைப்புடன் இணைத்து, சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பழைய பொருள் வியாபாரிகள் சங்கத்தின் திண்டிவனம் தலைவராக வெங்கடேசன், செயலாளராக காதர் மொய்தீன், பொருளாளராக அர்ஜீன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் வரும் மே 5 ம் தேதி மதுராந்தகத்தில் நடக்க உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 42-வது மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.