இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
திண்டுக்கல்லில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல்லை முனியாண்டி என்பவர் R.S. ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நல்லாம்பட்டியை சேர்ந்த யுவராஜ்குமார்(31), ராசு(எ)ராஜ்(23) ஆகிய 2 பேர் முனியாண்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி அவரது சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ்குமார், ராசு(எ)ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.