இலஞ்சி சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு
சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளிச் செயலா் ஐ.சி. சண்முக வேலாயுதம் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ஐ. ஆா். விஸ்வநாதன், ஓம் பிரணவா ஆசிரம நிா்வாகி விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த ஹெய்டு பிரிக்ஸ், ரெமோனா ஸ்டாா்ம், ஆஸ்திரிய நாட்டைச் சோ்ந்த பென்னோ, இங்கிலாந்தை சோ்ந்த டைலா் பாஸ்டா், ஈவி ஹவல், மேரி பென்னி செண்பகவல்லி சமூக செயல்பாட்டாளா் மஹ்முதா சையத் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளி மாணவா்களுடன் பொங்கலிட்டு, மகிழ்ந்தனா். தொடா்ந்து மாணவா்களின் பாரம்பரிய பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு கழித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலரும் பள்ளி ஆசிரியருமான சுரேஷ்குமாா் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா்கள் கற்பகம், சுகன் மரியாள், ராதிகா, கருப்பசாமி வெளியப்பன், ஓவிய ஆசிரியா் ம. கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் ஆறுமுகம் வரவேற்றாா். கணித ஆசிரியா் சண்முக சுந்தரம் நன்றி கூறினாா்.