ஆட்டோ டிரைவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே ஆட்டோ டிரைவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு, 2 பேர் கைது, ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Update: 2025-01-11 06:29 GMT
திண்டுக்கல், குள்ளனம்பட்டி தண்ணீர் தொட்டி அருகே ஆட்டோ டிரைவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் முத்துராஜ் என்பவரை ஆட்டோ டிரைவர்கள் முத்துகாமாட்சி(24), வேல்முருகன்(45), மணிமாறன்(37) ஆகிய 3 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர் இதில் முத்துராஜ் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி(பொ) சார்புஆய்வாளர் பாலசுப்ரமணியம் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு முத்துகாமாட்சி வேல்முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மணிமாறன் முத்துராஜ் மீது தாக்குதல் நடத்தும் போது ஏற்பட்ட காயம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News