வட மாநில சமையல் மாஸ்டர்

நாகையில் தூக்கு போட்டு தற்கொலை

Update: 2025-01-11 09:03 GMT
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ரோகித் தமாங் (26). நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், ரோகித் பெங்களூரில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றார். இந்நிலையில், நாகை திரும்பிய ரோகித் மன உளைச்சலில் இருந்து வந்ததால் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் ரோகித், அறையில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகை நகர போலீசார் ரோகிதத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அவருடைய அறையில் ரோகித் எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், அவரது மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார்.

Similar News