அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன். தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன். தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர்.சண்முகசுந்தரம் அனைத்துத்துறை திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது பல்வேறு துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செயல்பாடுகள் தொடர்பாகவும் அறிவுரை வழங்கப்பட்டது. ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.இந்த நிதியாண்டின் இலக்கை ஏய்திட போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைக்கான உத்தரவு பிரப்பித்தவுடன் எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும். வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தாலோ அல்லது வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்களை வைத்து பிரசவம் பார்த்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணிக்க கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கூட்டுறவுத்துறை தனிநபர் கடன் வழங்க முகாம் நடத்தப்பட வேண்டும். இராஜபாளையம் வட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் விரைவில் பயனாளிகள் தேர்ந்தெடுத்து குடியிருப்பு வழங்க ஏற்பாடுகள் செய்ய தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமான பணிகளுக்கு வருவாய்த்துறையினர் விரைந்து நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மாதாந்திர ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்று துறை ரீதியாக உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் முதற்கட்டமாக பசுமை பரப்பை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கு பயன்பெறும் வகையிலும் முருங்கை, நெல்லிக்காய், கொய்யா உள்ளிட்ட பழ மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் மகளிர் திட்டம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் தனி நபர் கடன் அதிகம் வழங்குவதன் மூலம் தனியார் மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் பொதுமக்கள் அதிக வட்டியுடன் கடன் பெறுவதை குறைக்கலாம். அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் வழங்கினார்.