ஜல்லிக்கட்டு இடம் ஆய்வு செய்த ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி.

குமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி.  ஆய்வு செய்தனர்.

Update: 2025-01-11 10:26 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வுள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் வினோத் செய்து வந்தார். இவரது அனுமதி கடிதத்தின் பேரில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மேற்கொள்ளப்டவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் கூறினார்கள். இதில் தாசில்தார் சிவகுமார், ஆர்.ஐ. புவனேஸ்வரி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News