திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு!
நகராட்சி புதிய பஸ் நிலைய பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு!
திண்டிவனம்-சென்னை- சாலையில் நகராட்சி சார்பில் ரூ.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணி, சலவாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி, மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் பழனி, நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர், கலெக்டர் கூறியதாவது:திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.25 கோடி மதிப்பீட்டில், ஆறு ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.இந்த வளாகத்தில், 50 பஸ் நிறுத்தங்கள், 61 கடைகள், 4 - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், ஒரு சைவ உணவகம், ஒரு அசைவ உணவகம், ஒரு - பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது.மேலும், 10 - காத்திருப்பு கூடம், 6 நேரக் காப்பகம் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 'நான் உங்களுக்கு உதவலாமா அறை' , பஸ் பயண முன்பதிவு அறை, ரயில் முன்பதிவு அறை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளது என்றார் .