திருவண்ணாமலை மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புக் குழுக்கூட்டம்.

பள்ளி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் பங்கேற்பு.

Update: 2025-01-11 15:31 GMT
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புக் குழுக்கூட்டம் இன்று போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ப.க.பா. இயக்கத்தின் மாநில செயலாளர், திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி ,சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், அ.நாகராஜன் மற்றும் வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ம. விசாலி ப.க.பா. இயக்கத்தின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சி.சென்னம்மாள் மற்றும் பழனி நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இறுதியில் திரு.திலகம் நன்றி கூறினார். இதில் அனைத்து ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்விற்கு பெரணமல்லூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனைவர்.T.சரவணன் நியமிக்கப்பட்டார்.

Similar News