ஓடும் ரயிலில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

கைது

Update: 2025-01-12 06:56 GMT
காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சியை நோக்கி வந்த ரயிலில் யாராவது மதுப்பாட்டில்கள் கடத்தி செல்கிறார்களா என தஞ்சை ரயில்வே இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் (தனிப்பிரிவு), விநாயகமூர்த்தி, சரவணசெல்வம் ஆகியோர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். கொரடாச்சேரி நீடாமங்கலம் இடையே ரயில் வந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பையை சோதனை செய்தனர். இதில் மதுப்பாட்டில்கள் இருந்தது. உடனே அந்த பையை கொண்டு வந்தவரிடம் விசாரித்தபோது அவர் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சேகரையை சேர்ந்த குமார் (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தஞ்சை ரயில்வே காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி 750 மி.லி. அளவு கொண்ட 15 மதுப்பாட்டில்களும், 375 மி.லி. அளவு கொண்ட 10 மதுப்பாட்டில்களும் என மொத்தம் 25 பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Similar News