வார சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை மந்தம்
நல்லம்பள்ளி ஞாயிறு வார சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை மந்தம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட நல்லம்பள்ளி பேருந்து நிறுத்த வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்யேகமாக வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் விற்பனை ஜோராக நடைபெறும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில் நேற்று ஜனவரி 12 நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுக் கோழிகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடைபெறவில்லை சிறிய அளவிலான நாட்டுக்கோழிகள் 300 ரூபாய் முதல் பெரிய மற்றும் எடையைப் பொறுத்து 1200 ரூபாய் வரையில் நாட்டுக்கோழிகள் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்துக்கு நாட்டுக்கோழிகள் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.