இலவச கண் பரிசோதனை முகாம்

முகாம்

Update: 2025-01-13 04:16 GMT
திருக்கோவிலுார் அடுத்த கிளியூரில் திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, அன்னை சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோதம்சந்த், முன்னாள் தலைவர் வாசன் முன்னிலை வகித்தனர். கோவை சங்கரா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 150 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரோட்டரி கிளப் உறுப்பினர் ஹரிகிருஷ்ணன், பள்ளி முதல்வர் சுபாஷ் உள்ளிட்ட பலரும் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Similar News