கோவை: பனைமரத்தில் மோதி 3 இளைஞர்கள் பலி !
கிணத்துக்கடவு சொக்கனூர் ரோட்டில் நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில் பனைமரத்தில் இருசக்கர வாகனம் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சொக்கனூர் ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில் பனைமரத்தில் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கையன்புதூரைச் சேர்ந்த வீரமணி, பிரபு மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரும் நண்பர்கள். பேக்கரியில் டீ அருந்திவிட்டு தங்களது ஊருக்கு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சம்பவ இடத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.