திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. வண்ணக் கோலங்கள் இட்டு மாவிலை தோரணங்கள் மற்றும் கரும்புகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தப்பாட்டம் மயிலாட்டம் மாடாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய உடை உடுத்தி குடும்பத்தாருடன் பங்கேற்றார். உழவர்களின் உற்ற துணையான மாடுகளுக்கு அலங்காரம் செய்து புது பானையில் பொங்கலிட்டு தீபாராதனை செய்து இயற்கை கடவுளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் அனைவரும் வழிபட்டனர். பின்னர் தப்பாட்டம் மயிலாட்டம் மாடாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.