ராமநாதபுரம் மீனவர் வலையில் சிக்கிய ஆமை
தொண்டியில்மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை 50 கிலோ எடை கடல் ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்;
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான படகில் சக்திவேல் கருப்பையா புது ராசா குமரேசன் வினோத் ராமர் உள்ளிட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று வலையை நிறுத்தி வைத்து வந்த நிலையில் வலையை எடுக்கச் சென்றபோது வலையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி இருந்ததை கண்டு தெரிந்தது அதில் தடை செய்யப்பட்ட கடல்ஆமை என்பதால் கடலோர காவல் படையினர்,கடலோர பாதுகாப்பு படை அறிவுறுத்தல் படி மீனவர்கள் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து ஆமையை மீட்டு கடலில் விட்டனர்.வளையல் சிக்கிய ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது