தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.14) முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.14) முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி 14.01.2025 மற்றும் 15.01.2025 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் (Heavy Rain Warning) கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் மோட்டார் பம்புகள் முதலிய பொருள்களை தயார் நிலையில் வைத்திடவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது மிகவும் அவசரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.