ஆம்பூரில் தனியார் காலணி தொழிலாளர்கள் போராட்டம்

ஆம்பூரில் தனியார் காலணி தொழிலாளர்கள் போனஸ் வழங்க கோரி போராட்டம்!

Update: 2025-01-13 07:24 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் 2 ஆண்டு காலமாக வழங்கப்படாத உள்ள போனஸ் மற்றும் ஊதியத்தை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது, பொங்கலுக்கு எதிர்பார்க்க வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டிய தொழிற்சாலை நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் (மொஹிப் ஷூஸ்) சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தொழிலாளர்களுக்கு கடந்த 2023,2024ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊதியம் சரிவர வழங்காததால், அனைத்தையும், உடனடியாக வழங்க கோரி காலணி தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும் காலணி தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், கொரோனாவினால் தொழிற்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால் தொழிற்சாலையில் மின்சார இணைப்பு மற்றும் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொங்கலுக்கு போனஸ் மற்றும் ஊதியம் எதிர்பார்க்க வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது...

Similar News