குமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணானந்தன் (34). பிஎஸ்எஃப் வீரர். மேற்கு வங்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி தனது நண்பர் முத்து குமார் (26) என்பவர் உடன் சபரிமலை பூஜைக்காக வாழை இலைகளை வெட்டுவதற்காக தளவாய்புரம் பகுதியில் பைக்கில் சென்று உள்ளார். அப்போது அதே பகுதி சஜின் தாமஸ் (26) என்பவர் வாழைத்தோட்டம் அருகே சாலை நடுவே நின்று கொண்டிருந்தார். இதை கிருஷ்ணானந்தன் கண்டித்ததால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் வாழை இலை வெட்டி விட்டு வரும்போது சஜின் இருவரையும் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் கிருஷ்ணானந்தன் வயிற்றில் குத்து விழுந்து படுகாயம் அடைந்தார். தடுத்த முத்துக்குமாருக்கும் குத்து விழுந்தது. அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் கிருஷ்ணானந்தன் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து தலைமறைவான சஜின் தாமசை தேடி வருகின்றனர். சஜின் தாமஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.