*உதகை அருகே எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கூலி தொழிலாளி சதீஷை தாக்கி கொன்ற கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது...

*உதகை அருகே எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கூலி தொழிலாளி சதீஷை தாக்கி கொன்ற கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது...

Update: 2025-01-13 04:44 GMT
உதகை அருகே எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கூலி தொழிலாளி சதீஷை தாக்கி கொன்ற கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வன பகுதியில் விடபட்டது. உதகை அருகே எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஷ்(35) என்பவர் கடந்த 3-ந்தேதி பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்த போது கரடி தாக்கியது. இதில் சதீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் சதீஷை சிறுத்தை தாக்கி கொன்றதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சதீஷை தாக்கியது கரடி என்பதை உறுதி செய்த வனத்துறையினர் கரடியை பிடிக்க அப்பகுதியில் இரண்டு கூண்டுகளும் 7 இடங்களில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் வனத்துறை வைத்த கூண்டில் கரடி சிக்கிய நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று தெப்பக்காடு வன பகுதியில் விடபட்டது. இருப்பினும் அப்பகுதியில் தொந்தரவு செய்தது அந்த கரடி தானா என்பதை உறுதி செய்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News