அரசு வன கல்லுாரியில் தொல்லியல் கருத்தரங்கம்

கருத்தரங்கம்

Update: 2025-01-13 04:19 GMT
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் மரபு மாணவர் மன்றம் இணைந்து தொல்லியல் கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் மோட்ச ஆனந்தன் வரவேற்றார்.கருத்தரங்கில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் பொன் வெங்கடேசன், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், விழுப்புரம் தொல்லியல் கழகத் தலைவர் மங்கை வீரராகவன் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், நடுகற்கள், தமிழி, வட்டெழுத்துக்களில் உள்ள தமிழர்களின் பண்டைய வாழ்வியல் முறைகளைப் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். மேலும் தொல்லியல் ஆய்வு குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் கல்லுாரி துறை தலைவர்கள் தர்மராஜ், முருகானந்தம், வீரலட்சுமி, உமா, பிரேமா, சங்கர் உட்பட மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் விஜயகுமார், ஆனந்தி, இன்பகனி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாணவி ஜான்சிராணி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

Similar News