வைகோ படித்த பள்ளியில் ஆண்டு விழா - மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்த வைகோ

கலிங்கப்பட்டியல் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2025-01-13 07:44 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகள் இன்று காலையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் சுப்பாராம், முதுகலை உயிரியல் ஆசிரியர் பழனிச்சாமி, பட்டதாரி தமிழாசிரியர் இராதாகிருஷ்ணன் மற்றும் மதிமுக கட்சியின் பொது துணைத் செயலாளர் தி,மு.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Similar News