ஸ்ரீவில்லிபுத்தூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.*
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளைநோயால் அவதியுற்ற போது. இக்கோவிலின் வைத்தியநாதரை வழிபட்டு சூளைநோய் நீங்கப்பெற்றார். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசன உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டு இன்று திருவாதிரையை முன்னிட்டு அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தனகாப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடராஜரை மாணிக்கவாசகர் எதிர்கொண்டு திருவெம்பாவை பாடல் பாடும் வைபவம். அதனைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.