கோவை: கோவிலில் திருட்டு - திருடன் கைது!

இராமநாதபுரம், பகுதியில் உள்ள பழமையான கருபராயசுவாமி கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2025-01-13 07:39 GMT
கோவை,இராமநாதபுரம் சண்முகா நகர் பகுதியில் உள்ள பழமையான அருள்மிகு கருபராயசுவாமி கோவிலில் கடந்த 5-ஆம் தேதி இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவிலின் கூரையை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கோவில் பூசாரியின் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு திருடனைத் தேடி வந்த போலீசார், பாக்கியராஜை நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாக்கியராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News