ஜெயங்கொண்டம் கசொக பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
ஜெயங்கொண்டம் கசொக பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர் ஜன.13- ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் மாலதி கண்ணன் தலைமை வகித்து உங்கள் விழா துவக்கி வைத்து பூஜை இட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பொங்கல் இனிப்பு வழங்கினார். மேலும் கல்லூரியில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு,கல்லூரி துணை தலைவர் மருத்துவர் மாலதி கண்ணன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.