ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்-அகற்ற மக்கள் கோரிக்கை
ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்-மக்கள் எதிர்ப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் சுமார் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பேரூராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு வரும் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் ஓட்டப்படுகின்றன. ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளால் நீர்நிலை பாதிப்பதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.