உடுமலை உலக சமாதான ஆலயத்தில் பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழா
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் உலக சமாதான ஆலயம் உள்ளது இங்கு 35-வது பிரபஞ்ச நல தவ வேள்வி நிறைவு விழா நடைபெற்றது குருமகான் பரஞ்சோதியார் டிசம்பர் 22ஆம் தேதி பிராண வாலயத்தில் பிரவேசித்தார் . நேற்றுடன் 21 நாட்கள் தவ வேள்வி மேற்கொண்ட குரு மகான் ஆலயத்தில் இருந்து வெளியே வந்தார் உலக சமாதான அறக்கட்டளை பொதுச் செயலாளர் சுந்தர்ராமன் வரவேற்றார் பின்னர் குரு மகன் அருளுரை ஆற்றினார் பெண்கள் நம் நாட்டின் கண்கள் பெண்கள் வளர்ச்சி நம் நாட்டிற்கு மிகவும் இன்றி அமையாததாக உள்ளது மேலும் விவேகானந்தர் பிறந்த நாளில் அவரின் கொள்கை கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் நல்லவன் வாழ்வான் கெட்டவன் வீழ்வான் என்ற கருத்துக்கு ஏற்ப அனைவரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்ந்தாலே சாலச் சிறந்தது மேலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய முயன்றால் அது தனக்கே வரும் நம்முள் இருக்கும் தெய்வீக உணர்வையும் வெளிப்படுத்த கல்வியும் ஆசிரியர்களும் உறுதுணையாக உள்ளனர் என குரு மகான் பரஞ்சோதியார் பேசினார் பின்னர் உலக அமைதி வேண்டி ஒரு நிமிடம் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது ஓய்வு பெற்ற கூடுதல் டிஜிபி ஈஸ்வரமூர்த்தி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்