அவ்வையார் மகளிர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
தர்மபுரி நகர பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் முன்னிட்டு பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுதா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர்கள் முருகன் .ஆனந்தன் . பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. மற்றும் ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலப்போட்டி பாட்டு போட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார் இதில். பெற்றோர் ஆசிரியர் கழக இயக்குனர் குமார். வெல்டிங் ராஜா. முருகன் .சுருளிராஜ்,மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப் பட்டது அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது