சாக்கடை கால்வாயில் இறங்கிய ஜல்லிக்கட்டு காளை
மதுரை ஜல்லிக்கட்டில் காளை சாக்கடை கால்வாயில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.14) காலை 6 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 3:30 மணி அளவில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மதுரை மாடக்குளத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை கேச்சிங் பாயிண்ட் பகுதியிலிருந்து வெளியேறி செம்பூரணி சாலை சந்திப்பில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்தது. அதனை போராடி காளையுடன் வந்தவர்கள் மீட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது...