சீரடி சாய்பாபா ஆலயத்தில் சமத்துவ பொங்கல்
தைப்பொங்கலை முன்னிட்டு சீரடி சாய்பாபா ஆலயத்தில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது
திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் தமிழர்கள் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆலயம் முன்பாக இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.பொங்கல் விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று . சமத்துவ பொங்கல்யினை பக்தர்களுக்கு அருட் பிரசாதமாக வழங்கப்பட்டது.